/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசை மிரட்டிய போதை கும்பல் கைது
/
போலீசை மிரட்டிய போதை கும்பல் கைது
ADDED : மே 28, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில், பொது இடத்தில் மது அருந்தி, மூவர் அட்டகாசம் செய்வதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசாரை, அதீத மதுபோதையில் இருந்த கும்பல், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பீர்பாட்டிலை தங்களது தலையிலேயே உடைத்து, அச்சுறுத்தும் வகையில் செய்துள்ளனர். அவர்களை, உறவினர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட, கொடுங்கையூரைச் சேர்ந்த கார்த்திகேயன், 25, முத்து, 20, விஜயகுமார், 22, ஆகிய மூவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.