/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமியாரை கொலை செய்த போதை மருமகன் கைது
/
மாமியாரை கொலை செய்த போதை மருமகன் கைது
ADDED : ஜூன் 30, 2024 12:28 AM

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவபூஷணம், 60. இவரது மகள் சசிகலா, 10 ஆண்டுகளுக்கு முன், ராமகிருஷ்ணன், 40, என்பவரை காதல் திருமணம் செய்தார்.
குடி பழக்கத்திற்கு ராமகிருஷ்ணன் அடிமையானதால், ஒரு மகள் மற்றும் ஒரு மகனை அழைத்துக் கொண்டு, சசிகலா தனியாக சென்றுவிட்டார்.
இதனால் ராமகிருஷ்ணன், தன் இரு மகன்களுடன், மாமியார் வீட்டிலேயே தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார்.
சில நாட்களாக வேலைக்கு செல்லாத ராமகிருஷ்ணன், நேற்று முன்தினம், மது அருந்த மாமியார் சிவபூஷணத்திடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார்.
மாமியார் பணம் தரவில்லை. இதில் அதிருப்தியடைந்த அவர், சிறிது நேரம் கழித்து, 'ஹாலோ பிளாக்' கல்லை எடுத்து, துாங்கிக் கொண்டிருந்த மாமியார் தலையில் போட்டு, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு தங்க கம்மலை அறுத்து தப்பினார்.
அக்கம் பக்கத்தினர் தகவலையடுத்து வந்த குரோம்பேட்டை போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவபூஷணத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, சிவபூஷணம் நள்ளிரவில் இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், செங்கல்பட்டில், நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த ராமகிருஷ்ணனை, நேற்று கைது செய்தனர்.

