/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பருப்பு, பாமாயில் இல்லாததால் ரேஷனில் பொதுமக்கள் வாக்குவாதம்
/
பருப்பு, பாமாயில் இல்லாததால் ரேஷனில் பொதுமக்கள் வாக்குவாதம்
பருப்பு, பாமாயில் இல்லாததால் ரேஷனில் பொதுமக்கள் வாக்குவாதம்
பருப்பு, பாமாயில் இல்லாததால் ரேஷனில் பொதுமக்கள் வாக்குவாதம்
ADDED : மே 14, 2024 12:35 AM

ரேஷன் கடைகளில், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இது இல்லாமல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, 5 கிலோ கோதுமை ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தன.
இதில், உளுத்தம் பருப்பு, சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. பருப்பு, பாமாயில், கோதுமை ஆகியவை, 70 சதவீத ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தவிர துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தனியாரில் இதன் விலை இருமடங்கு என்பதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் பருப்பு, பாமாயில் வாங்குவதற்காகவே, ரேஷன் கடைகளுக்கு வருகின்றனர்.
இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதியில் இருந்து நேற்று வரை சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், ஆலந்துார், நங்கநல்லுார், உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை உள்ளிட்ட பகுதி ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் வரவில்லை.
உணவு பொருட்கள் வழங்கல் துறையினர் அவற்றை அனுப்பாததால், பொருட்கள் வாங்க முடியாமல், ரேஷன் கடைகாரர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட உணவு வழங்கல் துறையினர் கூறுகையில், 'நந்தனம் கிடங்கில் இருந்துதான் இப்பகுதியில் உள்ள, 348 கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அந்த கிடங்கில் இருப்பு இல்லாததால் அனுப்பவில்லை. பருப்பு, பாமாயிலுக்கு இருப்பு வந்ததும் அனுப்பப்படும்' என்றனர்.
- -நமது நிருபர்- -

