/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைவேலி கால்வாயை சீரமைக்காததால் மடிப்பாக்கத்திற்கு மழை வெள்ள அபாயம்
/
கைவேலி கால்வாயை சீரமைக்காததால் மடிப்பாக்கத்திற்கு மழை வெள்ள அபாயம்
கைவேலி கால்வாயை சீரமைக்காததால் மடிப்பாக்கத்திற்கு மழை வெள்ள அபாயம்
கைவேலி கால்வாயை சீரமைக்காததால் மடிப்பாக்கத்திற்கு மழை வெள்ள அபாயம்
ADDED : செப் 16, 2024 03:09 AM

மடிப்பாக்கம்:பருவமழை காலத்தில், தென் சென்னையில் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்று, மடிப்பாக்கம். ஆண்டுதோறும் படகுகள் விட்டு, மக்களை காப்பாற்றுவது சகஜமாகிவிட்டது.
மூவரசம்பட்டு, ஏரிக்கரை, லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் சேகரமாகும் மழைநீர், சதாசிவம் நகர் வழியாக ராம்நகரில் சேகரமாகும்.
அங்கிருந்து பள்ளிக்கரணை, கைவேலி, பாலாஜிநகரில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக சதுப்புநிலம், ஒக்கியம், பகிங்ஹாம் வழியாக கடலில் கலக்கிறது.
மடிப்பாக்கத்தில் இருந்து மழைநீர் வெளியேறும் முக்கிய வழித்தடம் கைவேலி, மயிலை பாலாஜி நகர் கால்வாய். இக்கால்வாய் துார்வாரி சீரமைக்காததால் சகதி நிறைந்து, புதர் மண்டி காட்சியளிக்கிறது.
மேலும், அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளால் குப்பை கொட்டும் கிடங்காகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த கால்வாயை சீரமைக்காமல்விட்டால், தொடர் மழைக்கு மடிப்பாக்கத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பருவமழை துவங்கும் முன், பாலாஜிநகர் கால்வாயை முழுமையாக துார்வாரி, குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.