/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 ஆண்டுகளாக அதிகாரி இல்லாததால் மின் தடை பழுது சீரமைப்பில் சிக்கல் நீடிப்பு
/
2 ஆண்டுகளாக அதிகாரி இல்லாததால் மின் தடை பழுது சீரமைப்பில் சிக்கல் நீடிப்பு
2 ஆண்டுகளாக அதிகாரி இல்லாததால் மின் தடை பழுது சீரமைப்பில் சிக்கல் நீடிப்பு
2 ஆண்டுகளாக அதிகாரி இல்லாததால் மின் தடை பழுது சீரமைப்பில் சிக்கல் நீடிப்பு
ADDED : ஆக 06, 2024 01:10 AM
கண்ணகி நகர், கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் சுற்று வட்டார பகுதியில், 35,000க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. தவிர, ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.
கண்ணகி நகர் துணை மின் நிலையத்தில் இருந்து, இவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
சில மாதங்களாக, கேபிள், மின்மாற்றி, மின்பகிர்மான பெட்டி வெடிப்பு பிரச்னை அடிக்கடி நடக்கிறது. இதனால் தினமும், 5 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது.
இந்த துணை மின் நிலையத்தில், இரண்டு ஆண்டுகளாக இளநிலை பொறியாளர் நியமிக்கவில்லை. சோழிங்கநல்லுார், பெருங்குடி துணை மின் நிலைய அதிகாரிகள், கூடுதல் பொறுப்பாக பார்க்கின்றனர்.
அவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், மின் பெட்டி வெடிப்பு மற்றும் பழுதாகும் கேபிள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை முறையாக செய்வதில்லை. இதனால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
பகுதிமக்கள் கூறியதாவது:
இளநிலை பொறியாளர் இல்லாததால், அந்த பதவிக்கு வழங்கப்பட்ட மொபைல் எண்ணையும் 'சுவிச் ஆப்' செய்து வைத்துள்ளனர். மின் தடையின்போது யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை.
மின் பகிர்மான பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தால், அவற்றை சீரமைக்க தேவையான பொருட்களை வாங்கித் தர சொல்கின்றனர். பணம் தரவில்லை என்றால் சீரமைப்பு பணி கிடப்பில் போடப்படுகிறது.
பணம் கொடுக்கும் நபர்கள் உள்ள பகுதிகளில், உடனுக்குடன் சீரமைப்பு பணி நடக்கிறது. அதிகாரியை நியமித்து, சீரான மின் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அதிகாரிகள் காலியிடம், உதிரி பாகங்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்' என்றனர்.