/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீக் ஹவர்சில் மழைநீர் வடிகால் பணி மடிப்பாக்கத்தில் கடும் வாகன நெரிசல்

ADDED : ஆக 23, 2024 12:24 AM

மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் பரங்கிமலை - மேடவாக்கம் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணி நடந்து வருகிறது.
அதனால், மடிப்பாக்கம், பிரதான சாலையான சபரி சாலை போக்குவரத்து, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
அதேபோல, பேருந்து நிறுத்தம் செல்லும் பிரதான வழித்தடமான கார்த்திகேயபுரம் சாலையில், மழைநீர் வடிகால் பணி நடக்கின்றன.
வளர்ச்சி பணிகளால், மடிப்பாக்கத்தில் அடிக்கடி, போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
இந்நிலையில், சபரி சாலை, பஜார் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு மற்றும் கார்த்திகேயபுரம் சாலை ஆகியவற்றில் ஏராளமான வாகனங்கள், ஒரு கி.மீ., துாரம் அணிவகுத்தன. அரை மணி நேர போராட்டத்திற்கு பின், போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.