/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆர்., ஆறு வழிச்சாலை விரிவாக்கம் மே மாதத்திற்குள் நிறைவடையும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் உறுதி

ADDED : மார் 04, 2025 08:25 PM
சென்னை:''திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள, ஆறு வழிசாலை விரிவாக்கம் பணி, மே மாதம் முடிவடையும்,'' என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு கூறினார்.
இ.சி.ஆரில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை, நான்கு வழி சாலையாக உள்ள, 10 கி.மீ., துாரத்தை ஆறு வழியாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை , நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பின் அமைச்சர் கூறியதாவது:
இ.சி.ஆரில் போக்குவரத்து அதிகரித்ததால், 2009ல் தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்ய, 10 கோடி ரூபாய் ஒதுக்கி, நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.
பின், ஆட்சி மாற்றத்தால் பத்து ஆண்டுகள் கேட்பாரற்று கிடந்த அத்திட்டம், மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், நிலம் கையகப்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டி இருந்தது.
தற்போது, 95 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தது. மின்மாற்றி, மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி, 70 சதவீதம் மற்றும் வடிகால், மூடுகால்வாய் கட்டும் பணி 65 சதவீதம் முடிந்தன.
பாலவாக்கம், கொட்டிவாக்கத்தில் மார்ச் மாதம் பணி முடியும். மே மாதத்தில், திருவான்மியூர் - அக்கரை வரை, அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.
ஆறு வழி சாலை முடிந்தாலும், இ.சி.ஆரில் குறுக்கு சாலைகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனால், உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடக்கிறது. இதன் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
துரைப்பாக்கம் ரேடியல் சாலை - இ.சி.ஆர்., இணைப்பு பணி, விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.