/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி மோதி எண்ணுாரில் முதியவர் பரிதாப பலி
/
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி மோதி எண்ணுாரில் முதியவர் பரிதாப பலி
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி மோதி எண்ணுாரில் முதியவர் பரிதாப பலி
விதிமீறி வந்த கன்டெய்னர் லாரி மோதி எண்ணுாரில் முதியவர் பரிதாப பலி
ADDED : மார் 04, 2025 12:09 AM

எண்ணுார், பாரிமுனையில் இருந்து எண்ணுார் செல்லும் தடம் எண்: 4 மாநகர பேருந்து, நேற்று மதியம் எண்ணுார் விரைவு சாலை - பாரதியார் நகர் ரவுண்டானாவிற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
அப்போது, பேருந்தில் இருந்து இறங்கிய, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது, போக்குவரத்து விதிகளை மீறி எதிர்ப்புறமாக வந்த, கன்டெய்னர் லாரி மோதியது. இதில், அதன் பின்பக்க சக்கரத்தில்சிக்கி அவர் உயிர் இழந்தார்.
தகவலறிந்த எண்ணுார் போக்குவரத்து போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்தவர், ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த லிங்கமூர்த்தி, 65, என்பது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுநரான நாகராஜ், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
குற்றச்சாட்டு
எண்ணுார் விரைவு சாலை - சக்திபுரம் ஒட்டி செயல்படும், சரக்கு பெட்டக முனையத்திற்கு வரும் கன்டெய்னர் லாரிகள், திருவொற்றியூர் குப்பம் - மஸ்தான் கோவில் அருகே சென்று திரும்பி வந்து, அணுகு சாலையில் வரிசையில் காத்திருக்க வேண்டும்.
ஆனால், போக்குவரத்து போலீசார் 'கையூட்டு' பெற்று, பாரதியார் நகர் ரவுண்டானாவிலேயே, அணுகுசாலையில் எதிர்புறமாக ஏற செய்து, சரக்கு பெட்டக முனையத்திற்கு விரைவாக செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.
இதனால் தான், மாநகர பேருந்தில் இருந்து இறங்கிய முதியவர், கன்டெய்னர் லாரியில் சிக்கி பலியானார் என, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.