/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடக்க முடியாத அளவுக்கு நடைபாதை முழுதும் ஆக்கிரமிப்பு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

ADDED : ஆக 29, 2024 12:06 AM
சென்னை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு:
சென்னை மாநகரில், சாலையோரங்களில் பாதசாரிகள் நடக்க நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இந்த நடைபாதைகள் முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
இதனால் வாகனங்கள் செல்லும் சாலைகளில் இறங்கி பொதுமக்கள் நடந்து செல்வதால், விபத்துகள் அதிகரிக்கின்றன.
சென்னை கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை சாலையோர நடைபாதைகள், அசோக்நகர் நான்காவது நிழற்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தி.நகர் ஹிந்தி பிரசார சபா சாலை, ஜி.என்.செட்டி ரோடு, கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் ஆகிய பகுதிகளில், பொது மக்கள் நடந்து செல்ல முடியாதவாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு பல முறை மனு அளித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை கண்காணித்து, அவற்றை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.