/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடு
/
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடு
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடு
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் நடவடிக்கை எடுப்பதில் குறுக்கீடு
ADDED : ஆக 09, 2024 12:13 AM
சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகா, காரப்பாக்கத்தில், 112 சர்வே எண், 1.60 ஏக்கர் பரப்பில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இதை பாதையாகவும், அரசு கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த இடத்தை ஆக்கிரமித்து, உயர் அழுத்த மின்கம்பியை ஒட்டி ஆபத்தான நிலையில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றி அரசு துறைகளின் பயன்பாட்டிற்கு எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்டடம் கட்டும்போது மாநகராட்சி அதிகாரிகள், மூன்று முறை நோட்டீஸ் வழங்கி உள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் பணியை நிறுத்தி உள்ளனர்.
இது குறித்து, மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
கட்டுமான பணி துவங்கும்போதே, நோட்டீஸ் வழங்கினோம். அதன்பிறகும் பல முறை பணியை நிறுத்தி, நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.
மாநகராட்சி மேயரும், கட்டடத்திற்கு சீல் வைக்க பரிந்துரைத்தார். இரவில் பணி நடக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக எங்களிடம் சிலர் பேசுகின்றனர்.
இதனால், தீவிர நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் உத்தரவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.