/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொற்றுநோய் நிபுணர் குகானந்தம் மறைவு
/
தொற்றுநோய் நிபுணர் குகானந்தம் மறைவு
ADDED : ஜூன் 25, 2024 12:56 AM

சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடைச் பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் பி.குகானந்தம், 68. சென்னை மருத்துவ கல்லுாரியில் டி.பி.ஹெச்., படித்தவர்.
அமெரிக்கா, பிரிட்டனில் தொற்று நோய் மற்றும் எய்ட்ஸ் சார்ந்த சிறப்பு படிப்புகளையும், எம்.பி.ஹெச்., முதுநிலை படிப்பையும் படித்தார்.
சென்னையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை இயக்குனராகபொறுப்பு வகித்தவர். கொரோனா தொற்று பாதிப்பின் போது, தமிழக அரசின் முதன்மை மருத்துவ ஆலோசகர்களின் ஒருவராக இருந்தவர்.
சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய்கள் தலைவராக இருந்த டாக்டர் குகானந்தம், உடல்நலக்குறைவால் நேற்று மாலை உயிரிழந்தார். இறுதி சடங்குகள், சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் இன்று நடைபெற உள்ளது.