/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எர்ணாவூர் மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைப்பது அவசியம்
/
எர்ணாவூர் மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைப்பது அவசியம்
எர்ணாவூர் மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைப்பது அவசியம்
எர்ணாவூர் மேம்பால இறக்கத்தில் வேகத்தடை அமைப்பது அவசியம்
ADDED : ஜூலை 10, 2024 12:13 AM
எண்ணுார்,
திருவொற்றியூர், எர்ணாவூர் மேம்பாலத்தின் ஒருபுறம் பாரத் நகர், சுனாமி குடியிருப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை உள்ளன.
மேம்பாலத்தின் மறுபுறம் எர்ணாவூர், மகாலட்சுமி நகர், முருகப்பா நகர், மணலி விரைவு சாலை, மணலி, மாதவரம், மீஞ்சூர் பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளன.
வடசென்னையின் மிக முக்கிய இணைப்பு பாலம் என்பதால், போக்குவரத்து மிகுதியாக இருக்கும்.
மாதவரம், மணலி, மணலிபுதுநகர், விச்சூர் போன்ற இடங்களில் உள்ள கன்டெய்னர் முனையங்களில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கிச் செல்லும் கன்டெய்னர் லாரிகளுக்கு, எர்ணாவூர் மேம்பாலம் பிரதானம். இந்த நிலையில், மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக இறங்கும் கனரக வாகனங்களால், அவ்வப்போது விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
சில நேரங்களில், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மேம்பால இறக்கத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.