/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிர்லா கோளரங்க திருப்பத்தில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
/
பிர்லா கோளரங்க திருப்பத்தில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
பிர்லா கோளரங்க திருப்பத்தில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
பிர்லா கோளரங்க திருப்பத்தில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 30, 2024 12:40 AM

சென்னை,
கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் உள்ளது. அங்குள்ள பிர்லா கோளரங்கத்தில், 500 கலைக்கூடங்கள் அடங்கிய எட்டு அரங்கங்கள் உள்ளன.
இந்தியாவிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட, 360 கோண வான திரையரங்கமும் உள்ளது.
அறிவியல் சம்பந்தமாக தகவல்களை அறிய, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், கல்வி சுற்றுலாவாக இங்கு வந்து செல்கின்றனர்.
அடையாறு சர்தார் படேல் சாலையில் இருந்து வரும் பள்ளி வாகனங்கள், வேன்கள், காந்தி மண்டபம் சாலையில் கோளரங்கத்திற்குள் நுழைவதற்காக, திருப்பத்தில் பல நிமிடங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
அங்கு சிக்னல் எதுவும் அமைக்காததால், கோட்டூர்புரம் சந்திப்பு சிக்னலில் இருந்து வேகமாக வரும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பிர்லா கோளரங்க திருப்பத்தில் சிக்னல் அமைத்து, பள்ளி வாகனங்கள் திரும்பி செல்ல வசதி செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

