/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடமாநிலம் செல்லும் விரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல கோரிக்கை
/
வடமாநிலம் செல்லும் விரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல கோரிக்கை
வடமாநிலம் செல்லும் விரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல கோரிக்கை
வடமாநிலம் செல்லும் விரைவு ரயில்கள் விம்கோ நகரில் நின்று செல்ல கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2024 12:36 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையத்தை, தினசரி ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தையொட்டி, பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிறுத்தம் போன்றவை உள்ளன.
இதன் காரணமாக, கும்மிடிப்பூண்டி, எலாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணியர், விம்கோ நகர் ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், வடமாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து, மெட்ரோ ரயில் நிறுத்தம், பேருந்து நிறுத்தத்திற்கு, ஆட்டோ பிடித்து செல்ல வேண்டும்.
ஆனால், விம்கோ நகரில்இருந்து, பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிறுத்தம், 50 - 100 மீட்டர் துாரம் தொலைவிலேயே இருப்பதால், திருவொற்றியூரை காட்டிலும், விம்கோ நகரில் வடமாநில ரயில்கள் நின்று சென்றால் மிகவும் பயனாக இருக்கும்.குறிப்பாக, திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர்.
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், மக்கள் நெரிசல் வெகுவாக குறையும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, விம்கோ நகரில் வடமாநில விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

