/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்மஞ்சேரி மக்களுக்காக சமூக நலக்கூடம் விரிவாக்கம்
/
செம்மஞ்சேரி மக்களுக்காக சமூக நலக்கூடம் விரிவாக்கம்
செம்மஞ்சேரி மக்களுக்காக சமூக நலக்கூடம் விரிவாக்கம்
செம்மஞ்சேரி மக்களுக்காக சமூக நலக்கூடம் விரிவாக்கம்
ADDED : ஆக 06, 2024 01:09 AM

செம்மஞ்சேரி,: சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, பழத்தோட்ட சாலையில், 300 பேர் அமரக்கூடிய, ஒரு சமுதாய நலக்கூடம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சியாக இருந்தபோது கட்டப்பட்டது.
அதை அகற்றி உணவு பரிமாறும் அரங்குடன் விரிவாக்கம் செய்ய, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அக்கட்டடத்துடன் சேர்த்து புதிதாக ஒரு கட்டடம் அமைக்க சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், 4,500 சதுர அடி பரப்பில் கூடுதல் கட்டமைப்புடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
உணவு பரிமாறும் அரங்கம், சமையல் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. இந்த பணிகளை, ஓரிரு மாதத்தில் முடிக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கூடுதல் வசதிகள் ஏற்படுத்த, 50 லட்சம் ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகளும் நடைபெறும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.