/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
/
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
ADDED : ஆக 30, 2024 12:11 AM
சென்னை, ஆக. 30-
பயணியர் நெரிசல் காரணமாக, தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்களின் சேவை, நவம்பர் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் வரும் செப்., 1, 8, 15, 22, 29, அக்., 6, 13, 20, 27, நவ., 3, 10, 17, 24ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது
தாம்பரத்தில் இருந்து திங்கள் மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:45 மணிக்கு நாகர்கோவில் செல்லும். இந்த சிறப்பு ரயில் வரும் செப்., 2, 9, 16, 23, 30, அக்., 7, 14, 21, 28, நவ., 4, 11, 18, 25ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது
கொச்சுவேலி ரயில் ரத்து
அதேபோல், ரயில் இயக்க நிர்வாக காரணத்தால், சென்னை சென்ட்ரல் - கேரளா கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து, மாலை 3:45 மணிக்கு புறப்படும், வாராந்திர சிறப்பு ரயில், செப்., 4, 11, 18, 25ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
கொச்சுவேலியில் மாலை 6:25 மணிக்கு புறப்படும், வாராந்திர சிறப்பு ரயில், செப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
அரக்கோணம் ரயில்
சென்ட்ரல் - அரக்கோணம் காலை 8:20 மணி ரயில் இன்று, 31ம் தேதியில் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்ட்ரல் - அரக்கோணம் காலை 9:10, காலை 10:00, 11:00 மணி ரயில்கள், இன்று, 31, செப்., 1ம் தேதியில் திருவள்ளூர் வரை மட்டுமே செல்லும்.
சென்ட்ரல் - திருத்தணி காலை 11:45 மணி ரயில் இன்று, 31, செப்., 1ம் தேதியில் திருவள்ளூர் வரை மட்டுமே செல்லும். திருத்தணி - சென்ட்ரல் காலை 10:15 மணி ரயில் இன்று காலை 10:15 மணி ரயில், திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும்.
கடற்கரை - திருத்தணி பகல் 12:10 மணி ரயில், வரும் 1ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரல் - அரக்கோணம் பகல் 12:40 மணி ரயில் வரும் 1ம் தேதி திருவள்ளூர் வரை மட்டுமே செல்லும்.
அரக்கோணம் - சென்ட்ரல் மாலை 3:40 மணி ரயில் வரும் 1ம் தேதி திருவள்ளூரில் இருந்து செல்லும். சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில், வரும் 1ம் தேதி திருத்தணியில் இருந்து இயக்கப்படும்.