/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆரம்பாக்கத்தில் போலி டாக்டர் கைது
/
ஆரம்பாக்கத்தில் போலி டாக்டர் கைது
ADDED : ஆக 21, 2024 12:26 AM

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், போலி டாக்டர் சிகிச்சை அளிப்பதாக வந்த புகார் அடிப்படையில், நேற்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மீரா மற்றும் மருத்துவ குழுவினர், மருந்தகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த வரிசையில், ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் எஸ்.எம்.காவேரி மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, 27, என்பவர் மருத்துவராக இருந்தார்.
அவரது ஆவணங்களை சோதனை செய்தபோது, அவர் எம்.பி.பி.எஸ்., படிப்பை முழுமையாக முடிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்தது தெரிந்தது.
மேலும் அங்கு பணிபுரிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பாத்திமா, 25, செவிலியர் படிப்பை பதிவு செய்யாமல் பணிபுரிந்தது தெரிந்தது. சுகாதாரத்துறையினர், இருவரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

