ADDED : மே 03, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.ஜி.ஆர்., நகர்
எம.ஜி.ஆர்., நகர் காசி திரையரங்கில், நடிகர் விஜய் நடித்து 2004ல் வெளியான கில்லி என்ற சினிமா, மீண்டும் திரையிடப்பட்டு உள்ளது.
இதே தியேட்டரில், நேற்று முன்தினம் நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த தீனா என்ற படம், 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரையிடப்பட்டது.
இதை அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடினர். அப்போது, ரசிகர் ஒருவர் விஜய் பட பேனரை கிழித்தார்.
இதுகுறித்து திரையரங்க மேலாளர் ராமராஜன், 49 என்பவர் எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, அரும்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் என்ற எபினேசர் , 27 என்பவரை போலீசார் கைது செய்தனர்.