ADDED : ஆக 06, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
நொளம்பூர்: ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த பாடி, இளங்கோ நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 24; பழைய ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
முகப்பேர் ஏரி ஸ்கீம் பகுதியில் பால கிருஷ்ணன் நிறுத்தியிருந்த ஆட்டோ, கடந்த மாதம் 10ம் தேதி திருடு போனது.
இது குறித்து விசாரித்த நொளம்பூர் போலீசார் விசாரித்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம், 27 என்பவரை, ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, அவரது தந்தை முருகன், 65 என்பவரை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
