/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழுதடைந்த மின் கேபிளை சீரமைக்காததால் அச்சம்
/
பழுதடைந்த மின் கேபிளை சீரமைக்காததால் அச்சம்
ADDED : மே 02, 2024 12:42 AM
அடையார் மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, டான்சி நகரில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி, இரு மாதங்களுக்கு முன் நடந்தது. இதற்காக, பள்ளம் தோண்டும்போது, வீட்டு குடிநீர், கழிவுநீர் இணைப்பு மற்றும் மின்சார கேபிள் பழுதடைந்தது.
இதை சரி செய்யாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். எங்கள் சொந்த செலவில், மின் வாரிய ஊழியர்களை வைத்து, உயர்மட்ட மின் ஒயர் வழியாக மின் இணைப்பு பெற்றோம்.
மரக்கிளைகள், தேங்காய் விழுந்தால், உயர்மட்ட மின் ஒயர் மீண்டும் அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின் கேபிள் பழுதை நீக்கி, மின் இணைப்பு வழங்க வேண்டும்.
- ஐசா பாத்திமா, டான்சி நகர், வேளச்சேரி.

