/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து
/
அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து
ADDED : மே 29, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பிருந்தாவன் நகரில் பி.பி.சி.எல்., என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, நான்காவது மாடியில் உள்ள ராகிணி என்பவர் வீட்டில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த துரைப்பாக்கம், நாவலுார் மற்றும் வேளச்சேரி தீயணைப்பு துறையினர் போராடி, தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டனர். இதில், யாருக்கும் பாதிப்பு இல்லை.
வீட்டில் உள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக, கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.