/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்வெர்ட்டர் மின்கசிவால் ஹோட்டலில் தீ விபத்து
/
இன்வெர்ட்டர் மின்கசிவால் ஹோட்டலில் தீ விபத்து
ADDED : ஜூன் 19, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாப்பூர்,மயிலாப்பூர், வடக்கு மாட வீதியில் 'சரவண பவன்' என்ற தனியார் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் நிர்வாக அலுவலக அறை உள்ளது. நேற்று அதிகாலை இங்கிருந்து கரும்புகை வெளியேறி, திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.
மற்றொரு அறையில் தங்கி இருந்த ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறி சம்பவம் குறித்து தீணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
விசாரணையில், அலுவலகத்தில் இருந்த இன்வெர்ட்டரில் ஏற்பட்ட மின் கசிவால், தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.