/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில்வே கிடங்கில் தீ விபத்து மின் உபகரணங்கள் நாசம்
/
ரயில்வே கிடங்கில் தீ விபத்து மின் உபகரணங்கள் நாசம்
ரயில்வே கிடங்கில் தீ விபத்து மின் உபகரணங்கள் நாசம்
ரயில்வே கிடங்கில் தீ விபத்து மின் உபகரணங்கள் நாசம்
ADDED : ஜூலை 12, 2024 12:48 AM

சென்னை, சென்னை பெரம்பூரில், லோகோ ஒர்க்ஸ் புறநகர் ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே, ரயில்வேக்கு சொந்தமான ஜெனரல் ஸ்டோர் கட்டடம் உள்ளது.
இங்கு, ரயில்வே மின்சார கேபிள்கள், மின் உபகரணங்கள், ரயில் தண்டவாள சிக்னல் தொடர்பான பொருட்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில், நேற்று காலை 8:00 மணிக்கு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தோர், ரயில்வே ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர்.
தகவலறிந்து பெரம்பூர், செம்பியம், கொளத்துார் உட்பட ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்தனர்.  இரண்டரை மணி நேரம் போராடி, காலை 10:30 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, எரிந்த பொருட்கள் மீது மேலும் தீ பிடிக்காமல் இருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதியம் 2:00 மணிக்கு முழுமையாக தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கேபிள்கள், மின் உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

