ADDED : ஜூலை 24, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
அம்பத்துார்: அம்பத்துார் அருகே, மீன் வியாபாரியின் மொபெட் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
அம்பத்துார் அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் அருள், 55; மீன் வியாபாரி. இவர், கோயம்பேடில் இருந்து திருமுல்லைவாயல் நோக்கி, தன் ‘டி.வி.எஸ்., எக்ஸ்.எல்’ மொபெட்டில் நேற்று சென்றுள்ளார்.
சி.டி.எச்., சாலையில், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சென்றபோது, ஸ்கூட்டரில் இருந்து புகை வெளியாவதை கண்ட அருள், உடனடியாக சாலையோரம் போட்டு ஓடியுள்ளார்.
சிறிது நேரத்திலேயே மொபெட் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்கும் மொபெட் முழுதும் எரிந்து நாசமானது.
