/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் மீது வேன் மோதி ஐந்து பெண்கள் காயம்
/
பஸ் மீது வேன் மோதி ஐந்து பெண்கள் காயம்
ADDED : ஆக 29, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பாண்டூர் நிறுத்தத்தில் தனியார் பேருந்து பயணியரை ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது, பூண்டி அடுத்த அரும்பாக்கத்தில் இருந்து, கனகம்மாசத்திரம் அடுத்த கூளூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்த 'மகேந்திரா மேக்ஸி' வேன் மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பெண்களில், ஐந்து பேர் காயமடைந்தனர். உடனடியாக, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் வீடு திரும்பினர். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

