sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டட கழிவு குவிப்பால் சுருங்கிய கூவம் நதி

/

கட்டட கழிவு குவிப்பால் சுருங்கிய கூவம் நதி

கட்டட கழிவு குவிப்பால் சுருங்கிய கூவம் நதி

கட்டட கழிவு குவிப்பால் சுருங்கிய கூவம் நதி

1


UPDATED : ஜூலை 16, 2024 06:26 AM

ADDED : ஜூலை 16, 2024 12:08 AM

Google News

UPDATED : ஜூலை 16, 2024 06:26 AM ADDED : ஜூலை 16, 2024 12:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியால், கூவம் ஆற்றில் 20 கி.மீ., துாரத்திற்கு கட்டட கழிவு கொட்டப்பட்டு உள்ளது. இதனால், பருவமழை காலத்தில், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 2,624 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாம்பலம் கால்வாய், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலை பகுதியில், 1,139 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள், வரும் 2026ல் முடிவடைய உள்ளன.

சென்னையை பொறுத்தவரை, 2011 முதல் இதுவரை, மழைநீர் வடிகால், நீர்நிலை துார்வாருதல் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகளுக்காக, 12,820 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது. ஆனால், வெள்ள பாதிப்பு பிரச்னை தீரவில்லை.

கடந்த 2023ல் வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் ஒரு வாரத்திற்கு மேல் தத்தளித்தன.

இந்நிலையில், மதுரவாயல் - துறைமுகம் இடையே 5,800 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கூவம் ஆறு மற்றும் மதுரவாயல் பகுதியில், 2011ம் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் துாண்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டடுக்கு மேம்பாலத்திற்கு கூவம் ஆற்றில் துாண்கள் அமைக்க, இயந்திரங்களை கொண்டு செல்ல பாதை அமைக்க வேண்டியுள்ளது. அதனால், இந்த கட்டட கழிவுகள் கூவத்தில் கொட்டப்பட்டு, பாதை அமைக்கப்படுகிறது.

வளர்ச்சி பணிக்காக என்றாலும், கோயம்பேடு முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை உள்ள கூவம் ஆற்றில், கட்டட கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், இருபுறமும் பெரும்பகுதி கட்டட கழிவுகளால் அடைக்கப்பட்டு, கூவம் ஆற்றில் நீர் செல்லக்கூடிய பகுதி சுருங்கி உள்ளது.

தற்போது சென்னையில், தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை போல், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு நடந்தால், கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனவே, நீர்வளத்துறை, மாநகராட்சி மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அரசு துறைகள், இப்பிரச்னையின் தீவிரம் உணர்ந்து, பெரும் வெள்ளம் ஏற்படும் முன், கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அத்துடன், சென்னையில் இரண்டாவது கட்டமாக, பெரும்பாலான இடங்களில் மெட்ரோ வழித்தட மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் நடக்கின்றன.

இத்திட்டத்தில் முக்கிய பகுதியான பெரம்பூர், திருமங்கலம், அயனாவரம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு வழியாக சுரங்கப்பணி நடந்து வருகிறது.

தற்போது, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளால், மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இப்பணிகள் முழுமை பெறாததால், மழைநீர் வடிகால்களில் நீர் செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தயார் நிலை

கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால், வெள்ள அபாயம் ஏற்படும் என, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத்துறைக்கு எச்சரித்து உள்ளோம். பருவமழைக்கு முன்னதாக கட்டட கழிவு களை அகற்று வதாக உறுதி அளித்து உள்ளனர். தொடர்ந்து கூவம் ஆற்றில் நீர்வரத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.- மாநகராட்சி அதிகாரிகள்



கான்கிரீட் கழிவுகளை செப்டம்பரில் அகற்ற உறுதி

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து, 5,895 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மும்பையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.இத்திட்டத்திற்காக, கோயம்பேடு முதல் மெரினா நேப்பியர் பாலம் வரை, கூவத்தின் கரையில் துாண்கள் அமைக்கப்பட உள்ளன. துாண்கள் அமைக்க வசதியாக, கூவத்தின் கட்டுமான இடிபாடுகள் கொட்டப்பட்டு, துளையிடும் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன.சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆக்கிரமிப்புகளை மீட்டு, தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்த தடுப்புச் சுவரை அகற்றி, கட்டட கழிவுகள் கொட்டி, இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. தற்போது கூவத்தில், 40 இடங்களில் துாண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கட்டட கழிவு கொட்டப்பட்டு உள்ளதால், பருவமழையின் போது வெள்ளநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் என புகார் எழுந்தது.கட்டட இடிபாடுகளை, ஒப்பந்த நிறுவனம் அகற்றாத பட்சத்தில், நீர்வளத்துறை வாயிலாக அவற்றை அகற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக, 50 கோடி ரூபாயை முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்கப்பட்டது.ஆனால், செப்டம்பரில் கட்டட இடிபாடுகளை அகற்றுவதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, துாண்கள் கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us