/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெயிலில் தண்ணீரின்றி காய்ந்த பூச்செடிகள்
/
வெயிலில் தண்ணீரின்றி காய்ந்த பூச்செடிகள்
ADDED : ஏப் 27, 2024 12:28 AM
திருவல்லிக்கேணி, ஏப். 27-
சென்னை திருவல்லிக்கேணியில், மேம்பாலம் பகுதியில் அழகுக்காக வைக்கப்பட்ட பூச்செடிகள், தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன.
சென்னையில் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சென்னை மாநகராட்சி சார்பில் அழகுக்காக பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த செடிகள் வாடாமல் இருப்பதற்கு, தினமும் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
இந்நிலையில், கோடை வெயில் ஏப்ரல் மாதத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. அனல் காற்றும் வீசுகிறது. மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் சாலையோர பூங்காக்கள், மேம்பாலம் துாண்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகளுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சி வந்தாலும், சில இடங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
திருவல்லிக்கேணி, சுவாமி சிவானந்தா சாலை அருகில், மேம்பாலம் பக்கவாட்டில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு தண்ணீர் பாய்ச்சாமல் கருகிய நிலையில் காட்சி அளிக்கின்றன.
எனவே, செடிகளுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சி, அவற்றை பசுமையாக வைத்திருக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

