/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை
/
பா.ஜ., நிர்வாகி வீட்டில் பறக்கும் படை சோதனை
ADDED : ஏப் 18, 2024 12:27 AM
செங்குன்றம், சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். பா.ஜ., - ஓ.பி.சி., அணியின் மாநில செயலர். திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக, மாதவரம் சட்டசபை தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, நேற்று மதியம், 3:15 மணி அளவில், பறக்கும் படையினர், செங்குன்றம் போலீசாருடன் சென்று, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம், பரிசு பொருட்கள் என எதுவும் கிடைக்கவில்லை. மாலை, 4:15 மணி அளவில் , பறக்கும் படையினர் அங்கிருந்து சென்றனர்.

