/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாழான அமைந்தகரை காவல் நிலையம் 20 ஆண்டுகளாக போலீசார் அவதி
/
பாழான அமைந்தகரை காவல் நிலையம் 20 ஆண்டுகளாக போலீசார் அவதி
பாழான அமைந்தகரை காவல் நிலையம் 20 ஆண்டுகளாக போலீசார் அவதி
பாழான அமைந்தகரை காவல் நிலையம் 20 ஆண்டுகளாக போலீசார் அவதி
ADDED : செப் 03, 2024 12:34 AM

அமைந்தகரை, அண்ணா நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அமைந்தகரை காவல் நிலையம், அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ சாலையில், கூவம் கரையோரம் செயல்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடத்தில், பழைய 'ஆஸ்பெட்டாஸ்' கூரை கட்டடத்தில், வாடகையில் இயங்கி வருகிறது.
ஒரே கட்டடம் என்பதால், முன் பக்கம் சட்டம்-ஒழுங்கு போலீசும், பின் பக்கம் குற்ற தடுப்பு காவல் நிலையமும் இயங்கி வருகின்றன.
அதேபோல், பாழடைந்த அறையில் போக்குவரத்து போலீஸ், இரும்பு கூரையில் போலீசார் ஓய்வு அறைகள் உள்ளன. இந்த வளாகத்தில் கேட்பாரற்ற நிலையில் மழையிலும் வெயிலிலும், பறிமுதல் வாகனங்களும் கிடக்கின்றன.
புகார் கொடுக்க வரும் பொதுமக்களே, காவல் நிலையத்தை பார்த்து பரிதாபப்படும் வகையில், நிலைமை படுமோசமாக காட்சியளிக்கிறது.
சாலையை விட, பள்ளத்தில் கட்டடம் அமைந்துள்ளதால், ஒவ்வொரு பருவ மழையின் போதும், மழைநீர் புகுந்து, போலீசார் அவதிப்படுகின்றனர். உள்ளே தேங்கும் தண்ணீர், மோட்டார் வாயிலாக வெளியேற்றப்படும். இதனால், கோப்புகளை பாதுகாப்பதில் போலீசார் கடும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
எனவே, அமைந்தகரை காவல் நிலையத்திற்கு புது கட்டடம் கட்ட, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.