/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணக்கு கேட்ட வாலிபரை தாக்கிய அ.தி.மு.க., 'மாஜி' பிரமுகர் கைது
/
கணக்கு கேட்ட வாலிபரை தாக்கிய அ.தி.மு.க., 'மாஜி' பிரமுகர் கைது
கணக்கு கேட்ட வாலிபரை தாக்கிய அ.தி.மு.க., 'மாஜி' பிரமுகர் கைது
கணக்கு கேட்ட வாலிபரை தாக்கிய அ.தி.மு.க., 'மாஜி' பிரமுகர் கைது
ADDED : ஆக 28, 2024 12:48 AM
கொடுங்கையூர்,
கொடுங்கையூர், கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 36; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் கடும்பாடி அம்மன் கோவில் எதிரில் உள்ள காலி மைதானத்தில், அவரது நண்பர்களுடன் அமர்ந்து தாய கட்டை ஆடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த கிருஷ்ணமூர்த்தி, 'எவன்டா எங்கள் அண்ணன் முன்னாள் அ.தி.மு.க., 34வது வட்ட செயலர் கனகராஜிடம் கோவில் கணக்கை கேட்டது' எனக் கேட்டு, வீண் தகராறு செய்தார்.
மேலும், அருகில் இருந்த உருட்டு கட்டையால், யுவராஜை சரமாரியாக தாக்கினார்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் அம்மா பேரவை செயலர் கிருஷ்ணமூர்த்தி, 45, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மணி என்பவரை தேடி வருகின்றனர்.