/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்முலா -- 4 கார் பந்தயம் அட்டவணை வெளியீடு
/
பார்முலா -- 4 கார் பந்தயம் அட்டவணை வெளியீடு
ADDED : ஆக 29, 2024 12:08 AM
சென்னை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை பார்முலா - 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயம், வரும் 31 மற்றும் செப்., 1ல் சென்னையில் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக, இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இது. மேலும், தெற்காசியாவிலேயே இரவு பார்முலா - 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ போகிறது.
மொத்தம் 3.5 கி.மீ., சுற்றளவு உடைய சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை வழியே, இந்த பந்தயம் நடக்க உள்ளது.
இதற்கிடையே, இந்த கார் பந்தயத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு பட்டியலிடப்படவில்லை. இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

