/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுவனர் கோப்பை கிரிக்கெட் காட்டாங்கொளத்துாரில் துவக்கம்
/
நிறுவனர் கோப்பை கிரிக்கெட் காட்டாங்கொளத்துாரில் துவக்கம்
நிறுவனர் கோப்பை கிரிக்கெட் காட்டாங்கொளத்துாரில் துவக்கம்
நிறுவனர் கோப்பை கிரிக்கெட் காட்டாங்கொளத்துாரில் துவக்கம்
ADDED : ஆக 02, 2024 12:32 AM

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை விளையாட்டு துறை இயக்குனரகத்தின் சார்பில், நிறுவனர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, காட்டாங்கொளத்துார் வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. மொத்த, 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, எஸ்.ஆர்.எம்., பல் மருத்துவக் கல்லுாரியின் 'டீன்' விவேக், பல்கலையின் விளையாட்டு துறையின் இயக்குனர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் துவக்கினர்.
முதல் போட்டியில் விநாயகா மிஷன் பல்கலை மற்றும் வி.எஸ்.வி.எம்.வி., பல்கலை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வி.எஸ்.வி.எம்.வி., அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்த விநாயகா மிஷன் அணி, 17 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 70 ரன்களில் ஆட்டமிழந்தது.
அடுத்து பேட் செய்த, எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., பல்கலை அணி, அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, 7.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 72 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.