/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவகத்தில் மாமூல் கேட்டு மிரட்டிய நால்வர் கைது
/
உணவகத்தில் மாமூல் கேட்டு மிரட்டிய நால்வர் கைது
ADDED : ஜூன் 27, 2024 12:37 AM
வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, ராமானுஜர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52; அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.
கடந்த 23ம் தேதி நள்ளிரவு,நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி சாப்பாடும், மாமூலும் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், பணம் கொடுக்காமல், சாப்பாடு மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதுகுறித்த புகாரை விசாரித்த தண்டையார்பேட்டை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் ராயபுரம், கிரேஸ் கார்டனை சேர்ந்த பழைய குற்றவாளி ஆனந்த முருகன், 19, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகன், 21, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வினோத், 21, திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ், 42, ஆகிய நால்வர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, நால்வரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், ஆனந்தமுருகன் மீது, 14 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.