/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலர் திருடர்கள் 4 பேர் பிடிபட்டனர்
/
டூ - வீலர் திருடர்கள் 4 பேர் பிடிபட்டனர்
ADDED : மார் 08, 2025 12:07 AM
மடிப்பாக்கம்,மடிப்பாக்கம், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 28. கடந்த 18ம் தேதி, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் திருடு போனது.
இது குறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மாதவன், 28, வினோத், 22, மற்றும் வேளச்சேரி பிரதீப் குமார், 22, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதில், மாதவன் மீது 8 வழிப்பறி வழக்குகள், வினோத் மீது 7 திருட்டு வழக்குகள் உள்ளன. மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், ஸ்ரீராமின் ஸ்கூட்டர் உட்பட மூன்று ஸ்கூட்டர்களை மீட்டனர்.
மற்றொரு சம்பவம்
பழைய வண்ணாரப்பேட்டை, செல்வவிநாயகர் தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டியன், 47; மிட்டாய் வியாபாரி. கடந்த 2ம் தேதி, கோயம்பேடு, காளியம்மன் தெருவில் உள்ள கடைக்கு மிட்டாய் சப்ளை செய்து, திரும்பி வந்தபோது, ஸ்கூட்டர் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், அரும்பாக்கம், பெருமாள் கோவில் கார்டன் தெருவைச் சேர்ந்த காசிராஜன், 50, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், ஸ்கூட்டரை மீட்டனர்.