/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவர் வங்கி கணக்கில் ரூ.94,000 மோசடி
/
முதியவர் வங்கி கணக்கில் ரூ.94,000 மோசடி
ADDED : ஜூலை 05, 2024 12:25 AM
விருகம்பாக்கம், விருகம்பாக்கதைச் சேர்ந்தவர் நாராயணன், 60. வடபழனியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், கணக்கு வைத்துள்ளார்.
வடபழனி 100 அடி சாலையில் உள்ள மையத்தில், தன் வங்கி ஏ.டி.எம்., அட்டையை பயன்படுத்தி, நேற்று முன்தினம் 5,000 ரூபாய் எடுத்துள்ளார். பின் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 94,000 ரூபாய் எடுத்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
எட்டு முறை பணம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
'ஸ்கிம்மர்' கருவி வாயிலாக, முதியவர் நாராயணனின் ஏ.டி.எம்., அட்டையின் ரகசிய எண்ணை திருடி புதிய அட்டையை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.