/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் அபராதத்தால் தகராறு விரோதிகளாக மாறிய நண்பர்கள்
/
போலீஸ் அபராதத்தால் தகராறு விரோதிகளாக மாறிய நண்பர்கள்
போலீஸ் அபராதத்தால் தகராறு விரோதிகளாக மாறிய நண்பர்கள்
போலீஸ் அபராதத்தால் தகராறு விரோதிகளாக மாறிய நண்பர்கள்
ADDED : ஆக 30, 2024 12:12 AM
கொளத்துார், கொளத்துார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பிரவீன், 25; அம்பத்துாரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் ஹரிஹரன்.
கடந்த ஜனவரியில் ஹரிஹரன் தன் 'பைக்'கில், பிரவீனை அழைத்துக் கொண்டு, கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, கார் மீது இவர்களது பைக் மோதி, விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக்கை பறிமுதல் செய்து, 10,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அபராத தொகையை செலுத்தி, ஹரிஹரன் பைக்கை மீட்டுள்ளார். பின், அபராத தொகையில் பாதியை தர வேண்டும் என, பிரவீனிடம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் தராததால், ஆத்திரமடைந்த ஹரிஹரன், நேற்று முன்தினம் இரவு, நண்பருடன் சேர்ந்து, கொளத்துார் பாலாஜி நகரில் வைத்து பிரவீனை தாக்கியுள்ளார்.
இதில், பிரவீனுக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இதுகுறித்து கொளத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஹரிஹரன்,23, அவரது நண்பர் சதீஷ்குமார்,20, ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இம்மாதம் இறுதி வாரத்தை,'ஜீரோ விபத்தில்லா நாளாக' கொண்டாட முடிவு செய்து, அதற்கேற்ப போக்குவரத்து போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால், இந்த விபத்திற்கு விதித்த அபராதம், நண்பர்களை விரோதிகளாக்கி உள்ளது.