/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேங்க்' மாறிய ஆத்திரம் திருநங்கையர் அட்டூழியம்
/
'கேங்க்' மாறிய ஆத்திரம் திருநங்கையர் அட்டூழியம்
ADDED : ஆக 29, 2024 12:17 AM
ஓட்டேரி,
புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் அம்பிகா, 43. இவரது மகன் அப்பு என்கிற ஹாசி, 23. இவர் திருநங்கையாக மாறி, கடந்த மூன்று மாதங்களாக புளியந்தோப்பில் வசிக்கும் திருநங்கையருடன் வசித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர்களது நடவடிக்கை பிடிக்காததால், ஹாசி வேறு ஒரு திருநங்கை குழுவில் சேர்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கையர் சிலர், ஹாசி வீட்டிற்கு மதுபோதையில் சென்று ஹாசியின் அம்மா அம்பிகா, பாட்டி செங்கேணி ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி, கற்களால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று, உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத திருநங்கையர், மீண்டும் ஹாசி வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டியிருந்ததால், வீட்டில் பாட்டில் வீசி, பூட்டை உடைக்க முற்பட்டனர். வீட்டின் முன் பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் படி ஓட்டேரி போலீசார் விசாரித்து, சல்மா, சுரேகா, காவ்யா, ரித்திகா, சைலனா, தீக்ஷிதா ஆகிய புளியந்தோப்பை சேர்ந்த திருநங்கையரை தேடி வருகின்றனர்.