/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி -- ஊராட்சி எல்லையில் குப்பை மேடு
/
மாநகராட்சி -- ஊராட்சி எல்லையில் குப்பை மேடு
ADDED : ஆக 21, 2024 12:28 AM

நொளம்பூர்,
நொளம்பூர் சர்வீஸ் சாலையில் அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டன. மர்ம நபர்கள் அந்த குப்பையை எரிப்பதால், அப்பகுதியினர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 2022 ம் ஆண்டு செய்தி வெளியானது. இதையடுத்து, குப்பை அகற்றப்பட்டது.
தற்போது, அடையாளம்பட்டு ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, ஊராட்சி எல்லையில், சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட நொளம்பூர் குருசாமி சாலையில் கொட்டப்படுகிறது.
எனவே, இப்பகுதியில் உள்ள குப்பையை அகற்றுவதுடன், ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை முறையாக கையாள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

