ADDED : மே 01, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் - தீபான்ஷி தம்பதியின் மகள் சுபலட்சுமி, 6. தீபக் இறந்த நிலையில், இரண்டாவதாக தினேஷ் என்பவரை திருமணம் செய்த தீபான்ஷி, கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரில் வசிக்கிறார். நேற்று மாலை, மகள் சுபலட்சுமி மாயமானார்.
வீட்டின் பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் பேரலில் இருந்த தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தார். விளையாடிய போது சிறுமி பேரலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.