ADDED : ஏப் 18, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, திருமுல்லைவாயல், தென்றல் நகரைச் சேர்ந்தவர் மஞ்சு, 30; கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர், திருமுல்லைவாயல், எழில் நகரில் உள்ள புதிய கட்டடத்தில் சித்தாள் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம், கீழ்த்தளத்தில் இருந்து, இரண்டாவது தளத்திற்கு கட்டுமானத்திற்கான கம்பி எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, சாலையில் உள்ள மின்கம்பியில் உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே மஞ்சு உயிரிழந்தார்.திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

