/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காதலி' பேசாத ஆத்திரம் தாயை தாக்கிய வாலிபர்
/
'காதலி' பேசாத ஆத்திரம் தாயை தாக்கிய வாலிபர்
ADDED : ஜூலை 01, 2024 01:31 AM
திருவொற்றியூர்:வியாசர்பாடி, கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மி, 44. இவரது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இவருக்கு, பவானி, மகேஸ்வரி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இதில், இளைய மகள் மகேஸ்வரி, மணி என்பவரை திருமணம் செய்து, புளிந்தோப்பில் வசித்து வந்தார். இதனிடையே, வியாசர்பாடியைச் சேர்ந்த சரத், என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, ஓராண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சரத்திற்கு தெரியாமல் மகேஸ்வரி வேலைக்காக துபாய் சென்று விட்டார்.
ஆனால், அதன்பின் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த வாலிபர், நேற்று முன்தினம் இரவு, மகேஸ்வரியின் தாய் லஷ்மி வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
தொடர்ந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, லஷ்மியின் தலையில் திருப்பி அடித்து விட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட சரத், 22, என்பவர் மீது, ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், மகேஸ்வரியின் கணவர் மணியை, இரு மாதங்களுக்கு முன் வெட்டிய வழக்கில் சிறை சென்று, இரு தினங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.