/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரில் 'லிப்ட்' கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
காரில் 'லிப்ட்' கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
காரில் 'லிப்ட்' கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
காரில் 'லிப்ட்' கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : ஆக 04, 2024 12:53 AM

ஸ்ரீபெரும்புதுார்,
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 64. இவரது மனைவி ரேவதி, 58. கடந்த ஜூலை 31ம் தேதி, இருவரும் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மாம்பாக்கத்திலுள்ள மகள் வீட்டிற்கு வந்தனர். நேற்று முன்தினம் காலை, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல, மாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் ரேவதி காத்திருந்தார்.
அப்போது, 'இனோவா' காரில் வந்த மர்ம நபர், ரேவதியிடம் 'எங்கே செல்கிறீர்கள்' எனக் கேட்டுள்ளார். ரேவதி விபரம் கூறியதும், தானும் அந்த வழியாகத் தான் செல்வதாகக் கூறி, காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.
பேரம்பாக்கம் -- தண்டலம் சாலையில், வளர்புரம் அருகே சென்ற போது, மர்ம நபர் ரேவதியை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க செயினை பறித்துள்ளார். பின், அவரை அங்கேயே இறக்கிவிட்டு தப்பிச் சென்று உள்ளார்.
இது குறித்து ரேவதி அளித்த புகாரின்படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். பின், 24 மணி நேரத்தில், நகை பறிப்பில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சிபு, 31, என்பவரை கைது செய்து, 8 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.