/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையிலேயே வெட்டப்படும் ஆடுகள் வெளியிலிருந்து வரும் மாட்டிறைச்சி
/
கடையிலேயே வெட்டப்படும் ஆடுகள் வெளியிலிருந்து வரும் மாட்டிறைச்சி
கடையிலேயே வெட்டப்படும் ஆடுகள் வெளியிலிருந்து வரும் மாட்டிறைச்சி
கடையிலேயே வெட்டப்படும் ஆடுகள் வெளியிலிருந்து வரும் மாட்டிறைச்சி
ADDED : ஆக 18, 2024 12:16 AM
சென்னை, நோய் தாக்கப்பட்ட ஆடு, மாடு இறைச்சியை சாப்பிடக்கூடாது என்பதற்காக, 4 இறைச்சி கூடங்களை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கள்ளிக்குப்பம் ஆகிய நான்கு இறைச்சி கூடங்கள் செயல்படுகின்றன. இதில், புளியந்தோப்பு மற்றும் சைதாப்பேட்டை இறைச்சி கூடங்களில் மாடுகள் வெட்டப்படுகின்றன.
இந்த இறைச்சி கூடங்களில், ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு ஒருநாள் முன்னதாகவே அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு, அவற்றின் செயல்பாடு, உடல்நிலை உள்ளிட்டவற்றை கால்நடை டாக்டர்கள் பரிசோதிப்பர்.
லஞ்சம்
இறைச்சிக்காக பயன்படுத்த உகந்தவை என சான்று வழங்கினால் மட்டுமே, வெட்டப்படும். இதற்காக, ஒரு ஆட்டிற்கு 3.50 ரூபாயை, மாநகராட்சிக்கு வியாபாரிகள் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதன்படி, சென்னையில் சராசரியாக 5,000த்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், 100க்கும் மேற்பட்ட மாடுகளும் வெட்டப்பட்டு வருகின்றன.
அதேநேரம், இறைச்சி கூடங்களில், ஒரு ஆட்டிற்கு குறைந்தது 500 ரூபாய், மாட்டிற்கு 1,000 ரூபாய்க்கு மேல் வியாபாரிகளிடம் இருந்து மாநகராட்சி பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கணக்கிற்கு ஓரிரு ஆடுகளை, இறைச்சி கூடங்களில் வெட்டிவிட்டு, தேவைக்கு ஏற்ப தங்கள் கடைகளிலேயே ஆடுகளை வியாபாரிகள் வெட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஷெனாய் நகர், முகப்பேர் உள்ளிட்ட கூவம் கரையோர பகுதிகளிலும், அம்பத்துார், சோழிங்கநல்லுார் போன்ற புறநகர் பகுதிகளிலும் உள்ள வியாபாரிகள், விதிகளுக்கு புறம்பாக கடைகளிலேயே இறைச்சிகளை வெட்டுகின்றனர். இதனால், மாநகராட்சி சீலிடப்படாத இறைச்சி அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல், புறநகர் பகுதிகளில் வெட்டப்படும் மாட்டிறைச்சியை விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சிக்கு எடுத்து வந்து, இரண்டு, மூன்று நாட்கள் வரை வைத்து தரமற்ற முறையில் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நோய் தாக்கப்பட்ட ஆடு, மாடு இறைச்சியை சாப்பிடக்கூடாது என்பதற்காகவும், அவற்றை இறைச்சிக்காக கொல்வதற்கு முன், கொடுமைப்படுத்தக்கூடாது என்பதற்காகவும், நான்கு இறைச்சி கூடங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
அலட்சியம்
மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அலட்சியத்தால், உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, அனைத்து இறைச்சி விற்பனை கடைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.