/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோல சரஸ்வதி கோ - கோ போட்டி முகப்பேர் வேலம்மாள் 'சாம்பியன்'
/
கோல சரஸ்வதி கோ - கோ போட்டி முகப்பேர் வேலம்மாள் 'சாம்பியன்'
கோல சரஸ்வதி கோ - கோ போட்டி முகப்பேர் வேலம்மாள் 'சாம்பியன்'
கோல சரஸ்வதி கோ - கோ போட்டி முகப்பேர் வேலம்மாள் 'சாம்பியன்'
ADDED : ஆக 08, 2024 12:45 AM

சென்னை, கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இடையிலான 10 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டிகள், கீழ்ப்பாக்கம், கோல சரஸ்வதி வைணவ மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ கல்லூரி, நேரு பூங்கா விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் நடக்கின்றன.
நேற்று, அரும்பாக்கத்தில், இருபாலருக்கான கோ - கோ போட்டிகள் நடந்தன. அதில் சிறுவர்களுக்கான முதல் அரையிறுதியில், விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, 9 - 5 என்ற கணக்கில், முகப்பேர் வேலம்மாள் மேற்கு பள்ளியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில், முகப்பேர் வேலம்மாள் மெயின் பள்ளி, 12 - 11 என்ற கணக்கில் ராயபுரம் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளியை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இறுதி போட்டியில் முகப்பேர் வேலம்மாள் மெயின் பள்ளி மற்றும் விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளிகள் மோதின.
அதில், வேலம்மாள் மெயின் பள்ளி, 14 - 13 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில், ஆவிச்சி பள்ளியை தோற்கடித்து வெற்றி பெற்று 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
பெண்களுக்கான அரையிறுதியில், கோல சரஸ்வதி அணி, 9 - 4 என்ற கணக்கில் ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளியையும்; வேலம்மாள் மெயின் பள்ளி 9 - 3 என்ற கணக்கில் வேலம்மாள் மேற்கு பள்ளியை வீழ்த்தின.
வேலம்மாள் மெயின் பள்ளி மற்றும் கோல சரஸ்வதி பள்ளிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.