/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எஸ்.டி., சாலையில் சீரமைப்பு பணி 4 கி.மீ.,க்கு போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜூலை 12, 2024 12:39 AM

செங்கல்பட்டு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடி -- ஆத்துார் சுங்கச்சாவடி வரை, சாலையின் இரண்டு மார்க்கங்களிலும், பரனுார், மாமண்டூர், படாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர்.
எனவே, இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே, புதிதாக சாலை அமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக திருச்சி மார்க்கத்தில் பணிகள் நடக்கின்றன.
இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், இருங்குன்றம்பள்ளியில் இருந்து மாமண்டூர் வரை எதிர்திசையில் திருப்பி விடப்பட்டு உள்ளன.
நேற்று மாலை ஜி.எஸ்.டி., சாலையில் மாமண்டூரில் இருந்து பழவேலி வரை, 4 கி.மீ., துாரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை நெரிசலில் சிக்கின.