/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிசி, கோதுமை, உப்புக்கு ஜி.எஸ்.டி., வரி நீக்க வேண்டும் வணிகர் மாநாட்டில் தீர்மானம்

ADDED : மே 06, 2024 01:24 AM

சென்னை:தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மே 5, வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு 6வதுமாநாடு, வானகரம், விங்ஸ் கன்வென்ஷன் ஹாலில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் கொளத்துார் ரவி, வணிக கொடியேற்றினார். வி.ஜி.பி., குழுமங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ கருப்பையா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் மாநில தலைவர் கொளத்துார் ரவி கூறுகையில், ''தமிழகத்தில் அன்னிய வணிகத்தால் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. சில்லறை வணிகத்தை காக்க, வணிகர் அனைவரும் திரண்டு வந்துள்ளீர்கள். இந்த மாநாடு, தமிழக ஒட்டுமொத்த வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமைந்து உள்ளது,'' என்றார்.
அரிசி, கோதுமை, உப்பு பொருட்களின் ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். பேரிடர் காலங்களில் வணிக இழப்புகளை கணக்கில் கொண்டு, அரசு உதவி செய்ய வேண்டும்.
சிறு வணிகர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.