/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜி.எஸ்.டி., சாலை திடீர் பள்ளத்தில் சிக்கிய பஸ்
/
ஜி.எஸ்.டி., சாலை திடீர் பள்ளத்தில் சிக்கிய பஸ்
ADDED : ஆக 20, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், மீனம்பாக்கத்தில் இருந்து கிண்டி செல்லும், ஜி.எஸ்.டி., சாலையின் நடுவே மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
இதில் அடைப்பு ஏற்பட்டால் துார் வாரி சீரமைக்க 'மேன்ஹோல்' மூடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூடி சேதமடைந்து, திடீரென உள்வாங்கி நேற்று பள்ளம் விழுந்தது. அப்போது, அவ்வழியே, தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்ற மாநகர அரசு பேருந்தின் சக்கரம், அதில் சிக்கியது. பின், இழுவை வாகனம் வாயிலாக பேருந்து மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தால் அரை மணி நேரம் வாகன நெரிசல் பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் வந்து நெரிசலை சீரமைத்தனர்.

