ADDED : ஜூன் 27, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாப்பூர்,
சார்ஜ் போட்டபடி மொபைல் போனில் பேசிய காவலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மயிலாப்பூர், நாகேஸ்வரா பூங்கா அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியாக இருந்தவர் கணேஷ், 25. நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனை சார்ஜில் போட்டபடி பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதே குடியிருப்பில் வசிக்கும் ஆசைத்தம்பி, 71, என்பவர் அளித்த புகார்படி, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.