ADDED : செப் 11, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாண்டி பஜார், நேபாளம் நாட்டை சேர்ந்தவர் கேசவ், 21. இவர், தி.நகர் வாசன் தெருவில் கட்டப்பட்டு வரும் புது கட்டடத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். ஒரு மாதமாக மனைவி விமலாவுடன் அங்கு தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கட்டடத்தின் தரைத்தளத்தின் ஈரமான பகுதியில் நடந்து சென்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

