/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்தவருக்கு 'குண்டாஸ்'
/
போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்தவருக்கு 'குண்டாஸ்'
போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்தவருக்கு 'குண்டாஸ்'
போலி சான்றிதழ் தயாரித்து மோசடி செய்தவருக்கு 'குண்டாஸ்'
ADDED : பிப் 27, 2025 01:10 AM

ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி, 64. அவருக்கு, விச்சூர் கிராமத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3,600 சதுர அடி நிலம் இருந்தது.
திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசன், 42 என்பவர், 1999 ல் கோட்டீஸ்வரி இறந்ததாக போலி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் தயாரித்து, மோசடியாக விற்றுள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு 30 லட்சம் ரூபாய்.
அதேபோல், மீஞ்சூர், ரமணா நகரைச் சேர்ந்த தசரதன், விஜயலட்சுமி தம்பதியினருக்கு சொந்தமான, வெள்ளிவாயல் சாவடியில் உள்ள, 7.52 ஏக்கர் நிலத்தையும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்றுள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு 1.50 கோடி ரூபாய்.
இதுகுறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், திருவொற்றியூர், திருநகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனை, கடந்த 12ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வந்து, போலியான இறப்பு சான்றிதழ் தயாரித்து மீண்டும் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தமிழ் செல்வனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்க கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.

